, 17 JULY 2018
நாரம்மல கல்வங்குவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய குறித்த இளம் தாயின் இளைய குழந்தையின் வயது, 3 மாதங்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் உடலம் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
HiruNews
0 comments:
Post a Comment