23 JULY 2018
பலாங்கொடை - சமனலவத்த பிரதேசத்தில் 10 வயது சிறுவன் காணாமல் போய் இன்றுடன் 4 நாட்கள் கடந்துள்ள போதும் இதுவரை சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
சிறுவனை தேடும் நடவடிக்கையில் இராணுவம் , காவற்துறை மற்றும் பிரதேசவாசிகள் இன்றும் ஈடுபட்டிருந்த நிலையில் , இதன்போது சிறுத்தையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பசுவொன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை சமனலவத்த பாடசாலையின் தரம் 5ல் கல்வி கற்கும் குறித்த சிறுவன் தனது தந்தை விறகு வெட்ட காட்டிற்கு சென்றிருந்த போது அவரிடம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கடந்த 20ம் திகதி வீட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.
தந்தை வீடு திரும்பிய போதும் சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சுமார் 50 பேர் அடங்கிய இராணுவ குழுவொன்று சமனலகந்த மற்றும் ஹுணுவல மலை வனப்பகுதிகளில் இன்றைய தினம் சிறுவனை தேடிய போதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என இராணுவ ஊடக பேச்சாளர் ப்ரிகேடியர் சுமித் அதபத்து குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment