JULY 2018 -
பாடசாலை தவணை பரீட்சை இடம்பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சிலர் சட்டவிரோதமாக பாடசாலையினுள் நுழைந்து துண்டுப்பிரசுரங்களை ஆசிரியர்களுக்கு விநியோகித்ததாக கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் உப அதிபர் காவற்துறையில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
தொழிற்சங்கம் என தெரிவித்துக்கொண்டு சிலர் தமது பாடசாலையில் அத்துமீறி நுழைந்து எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ள தொழற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஆசிரியர்களிடம் கோரியதாக உப அதிபர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் அமைச்சின் அவசர அழைப்பு இலக்கமான 1988 ஊடாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment