Monday, July 23, 2018

அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் மூளை வீக்கம் உண்டாகும்!!

23.07.2018

அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் மூளை வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

hyponatremia என்பது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கும் ஒரு நோய் ஆகும்.

இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையான மூளை வீக்கத்திற்கு இட்டுச் செல்லும்.

தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் குடிப்பதனால் hyponatremia ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவிலுள்ள மேக்கில் பல்கலைக்கழகத்தின் சுகாதார மையத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த ஒரு குழு, மூளை எப்படி hyponatremia நோயினை அடையாளம் காண்கிறது எனவும், அளவுக்கு அதிகமான தண்ணீர் உடலில் இருப்பதை எப்படி ஒழுங்குசெய்கிறது எனவும் கண்டறிந்துள்ளது.

எனவே அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment