Monday, July 23, 2018

அதிக நேரம் மொபைலைப் பயன்படுத்துகின்றீர்களா? எச்சரிக்கை!!


23.07.2018

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தற்போது மொபைல்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

குறிப்பாக மொபைல்களை பலர் நீண்ட நேரம் பாவிக்கின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தரும் செய்தி ஒன்று காத்திருக்கின்றது.

அதிக நேரம் மொபைல்களை பாவித்தால் ஞாபக மறதி ஏற்படும் என ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அதிக நேரம் மொபைல்களை பயன்படுத்தும் 1000 பேர் குறித்த ஆய்விற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதிக நேரம் மொபைல்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment