Sunday, July 1, 2018

மைத்திரி சவூதி போகிறாராம்..! நுரைச்­சோ­லை வீட்டு விவகாரத்தில், அம்­பாறையில் அமளிதுமளி

July 01, 2018 

சுனா­மியால் பாதிக்­கப்­பட்டு வீடு வாசல்­களை இழந்து பரி­த­விக்கும் அப்­பாவி மக்­க­ளுக்கே சுனாமி வீடுகள் வழங்க வேண்டும். எவ்­வித காரணம் கொண்டும் சுனா­மியால் பாதிக்­கப்­ப­டாத எவ­ருக்கும் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் அவர்­க­ளுக்கு வீடு வழங்­கு­வதும் அநி­யா­ய­மான முடி­வென திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து கார­ச­ார­மான வாக்­கு­வாதம் இடம்­பெற்று பெரும் அம­ளி­து­ம­ளியும் இடம்­பெற்­றது.

இச்­சம்­பவம் அம்­பாறை கச்­சே­ரியில் நடை­பெற்ற மாவட்ட இணைப்­புக்­குழுக் கூட்­டத்­தின்­போதே இடம்­பெற்­றது.

மாவட்ட இணைப்­புக்­குழுத் தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி. தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் இணைத்­த­லை­வர்­க­ளான அமைச்சர் தயா கமகே, முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எஸ்.உது­மா­லெப்பை ஆகியோர் உட்­பட பிரதி அமைச்சர் அனோமா கமகே, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விம­ல­வீர திசா­நா­யக்க, அம்­பாறை அர­சாங்க அதிபர் துசித பி. வணி­க­சிங்க, மாவட்­டத்தின் பிர­தேச செய­லா­ளர்கள், பிர­தேச சபை தவி­சா­ளர்கள், அரச திணைக்­கள கூட்­டுத்­தா­பனத் தலை­வர்கள் ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்­டனர்.

2004இல் ஏற்­பட்ட சுனாமிப் பேர­லை­யின்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கென, சவுதி அர­சாங்­கத்­தினால் அக்­க­ரைப்­பற்று பிர­தேச சபைக்­குட்­பட்ட நுரைச்­சோ­லையில் நிர்­மா­ணிக்­க­பட்ட வீடு­களை பகிர்ந்­த­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட அர­சாங்க அதி­பரால் தெரி­விக்­கப்­பட்­ட­போதே இவ்­வா­றான அமளி துமளி நிகழ்வு ஏற்­பட்­டது.

தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த இணைப்­புக்­குழுத் தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி.,

சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கென சவுதி அர­சினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இவ்­வீ­டு­களை தற்­போது விகி­தா­சார முறைப்­படி 76 வீத­மாக பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் வழங்­கு­மாறு கூறு­வது நல்­லாட்­சியைக் கேலிக் கூத்­தாக்கும் செயல் என கூறினார். இவ்­வே­ளையில் குறிக்­கீடு செய்த பிரதி அமைச்சர் சிறி­யானி விஜ­ய­விக்­ரம, நீதி­மன்றத் தீர்ப்பும் அவ்­வாறே உள்­ளதால் அதன்­ப­டியே செயற்­ப­டுத்­து­மாறும் அமைச்­ச­ர­வை­யிலும் இதே முறையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­ப­டியால் செயற்­ப­டுத்­து­மாறும் கூறி­ய­தை­ய­டுத்து, இதன்­போது குறுக்­கிட்ட சம்­மாந்­துறை பிர­தேச சபை தவி­சாளர் எம்.எம்.நௌசாத், பௌத்த, இந்து மக்­க­ளுக்­கென சவுதி அரசு இந்த வீடு­களை நிர்­மா­ணிக்­க­வில்லை. விகி­தா­சார முறைப்­படி சுனாமி யாரையும் தாக்­க­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­களைக் கருத்­திற்­கொண்டே நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. அக்­க­ரைப்­பற்று பகு­தியில் பாதிக்­க­பட்ட கணி­ச­மானோர் முஸ்­லிம்­களே. எனவே மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் தெரிவு இடம்­பெற்று வழங்­கப்­பட வேண்டும் என்றும் தெரி­வித்தார். இதனைத் தொடந்து சபையில் பலத்த சல­ச­லப்பு ஏற்­பட்­ட­துடன் எவ­ரு­டைய பேச்­சையும் எவரும் கேட்க முடி­யா­த­வாறு சபை குழப்ப நிலையை அடைந்­தது.

இத­னை­ய­டுத்து குறுக்­கிட்ட பிரதி அமைச்சர் சிறி­யானி, இவ்­வாரம் ஜனா­தி­பதி சவு­திக்கு செல்ல உள்­ளதால் இவ்­வீ­டு­களின் நிலைமை என்­ன­வென்று அங்கு ஜனா­திபதி­யிடம் வின­வினால் எமது ஜனா­தி­பதி என்ன பதி­ல­ளிப்பார். எனவே நீதி­மன்றத் தீர்ப்­பையே செயற்­ப­டுத்­து­மாறும் தொடர்ந்தும் வலி­யு­றுத்­தினார். இதற்கு கருத்துத் தெரி­வித்த மன்சூர் எம்.பி., ஜனா­தி­பதி சவு­திக்குச் செல்ல வேண்­டு­மென்­ப­தற்­காக பாதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளுக்கு வீடுகள் வழங்க முடி­யாது என அழுத்தம் திருத்­த­மாகத் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து முன்னாள் எம்.பி. சந்­தி­ர­தாச கலப்­பத்தி நீதி­மன்றத் தீர்ப்பில் திருப்­தி­யில்லை எனின் மேன்­மு­றை­யீடு செய்து பொருத்­த­மான தீர்வைப் பெறு­வதே சாத்­தி­ய­மா­னது என்றார்.

இதற்குப் பதி­ல­ளித்த முன்னாள் மாகாண அமைச்சர் உது­மா­லெப்பை, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மனி­தா­பி­மான ரீதியில் வீடு­களை வழங்­கு­வதே நியா­ய­மா­னது. நாம் சாதி பேதங்­களை மறந்து செயற்­ப­டுவோம். மூவி­னங்­களும் இந்­நாட்டுப் பிர­ஜைகள் என்று தெரி­வித்தார்.

அக்­க­ரைப்­பற்று மாந­கர மேயர் ஏ.அகமட் சக்கி:- பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எனது பிர­தேச மக்­களே. அவர்கள் இன்னும் ஓலைக்­கு­டி­சை­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக வீடுகள் வழங்க நாம் ஒரு­போதும் பின் நிற்­க­மாட்டோம். சுனா­மியால் பாதிப்­பு­றாத எவ­ருக்கும் வீடுகள் வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது எனவும் உரத்த தொனியில் தெரி­வித்­ததைக் காண முடிந்தது.

விமலவீர திசாநாயக எம்.பி.:- நீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்குவோம் அல்லது மேன்முறையீடு செய்து தீர்ப்பொன்றைப் பெறுவோம் என்றார். இதனையடுத்து மன்சூர் எம்.பி. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டவை சுனாமியால் பாதிப்புற்றவர்களுக்கே. விகிதாசார முறையைக் கையாண்டு நல்லாட்சியை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் ஆக்ரோஷமாகத் தெரிவித்ததுடன் ஜனாதிபதியுடன் பேசித் தீர்க்கமான முடிவொன்றைப் பெறுவதாகவும் சபையில் முடிவெடுக்கப்பட்டது.

Vidivelli

0 comments:

Post a Comment