Sunday, July 1, 2018

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் ; அரசாங்கத்தின் புதிய சலுகை

July 01, 2018
 

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 25 வயத்திற்குட்பட்ட இளைஞர்கள் தொழில்துறையில் ஈடுபடுவதற்காக வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும் என்று திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.

உலகத்தை நோக்கி முன்னேறக்கூடிய ஆற்றல் மிக்க தொழில்துறையினர் நாட்டில் இருக்கின்றனர். இருப்பினும் தற்பொழுது சந்தையில் நிலவும் வட்டி வீதங்களின் கீழ் கடனை பெற்று வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது சிரமமாக இருப்பதாக இவர்கள் நினைக்கின்றனர் என்று தெரிவித்த அவர்
இந்த நிலைப்பாட்டை முற்றாக புறந்தள்ளி ஆற்றல்மிக்க தொழில் துறையினர் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய வைப்பதே என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

2018ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு தொழில்துறையினருக்கு கடன் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிரமங்கள் இன்றி தொழில் துறையினருக்கு வர்த்தக நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றும் திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.

0 comments:

Post a Comment