19 JULY 2018
சர்ச்சைக்குரிய தமது கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்காற்று குழுவிடம் விஜயகலா மகேஸ்வரன் தமது விளக்கத்தை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சூரியன் செய்திப் பிரிவுக்கு இந்த தகவலை வழங்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளை மீளுருவாக்குவதே தமது இலக்கு என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சி நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தது.
இந்த குழு விஜயக்கலா மகேஸ்வரனிடம் விளக்கம் கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பி இருந்ததுடன், இதற்கு 20ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கி இருந்தது.
எனினும் நேற்று முன்தினம் மாலை விஜயகலா மகேஸ்வரன் தமது சட்டத்தரணி ஊடாக விளக்கக் கடிதத்தை குறித்த குழுவிற்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நிலவுகின்ற நிகழ்கால பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் தொடர்பில் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தமது கருத்து அமைந்திருந்ததாக அவர் தமது விளக்கக்கடிதத்தில் கூறி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hirunews
0 comments:
Post a Comment