19 JULY 2018
வெலிகட காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கமல் அமரசிங்கவுக்கு கொழும்பு நீதவானால் வழங்கப்பட்ட ஒரு வருட சிறைதண்டனையை, உடநடியாக அமுல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டுள்ளது.
சட்டதரணி ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவருக்கு குறித்த கொழும்பு நீதவானால் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து குறித்த காவற்துறை அதிகாரி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment