Tuesday, July 17, 2018

பல வருடங்களாக மாட்டிறைச்சியினை மாத்திரம் உணவிற்கு எடுத்துக்கொள்ளும் சிறுமி!!

17 JULY 2018 -

நோய் நிலைமை காரணமாக பல வருடங்களாக மாட்டிறைச்சியினை மாத்திரம் உணவிற்கு எடுத்துக்கொள்ளும் சிறுமி தொடர்பில் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு குறித்த சிறுமி பிறந்துள்ளார்.

பிறக்கும் போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்ட சிறுமியிடம் சில நாட்களின் பின்னர் அவரது தாய் மாற்றத்தை அவதானித்துள்ளார்.

தாய்ப்பால் அருந்திய பின்னர் வயிறு வீக்கமடையும் அதேவேளை மலத்தில் இரத்தம் வௌியேறுவதாகவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சிறுவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு பச்சை ஆப்பிள் மற்றும் பச்சை நாடன் வாழைப்பழங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

பின்னர் , நான்கு வயதிற்கு பின்னர் சிறுமிக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாட்டிறைச்சியின் விலை அதிகமாக காணப்படுவதால் அதனை தொடர்ந்தும் வாங்கும் வசதி தம்மிடம் இல்லை என குறித்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment