17 JULY 2018
முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் 17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் , 4 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் , தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் , நேற்று பிற்பகல் 6 மணிக்கு முன்னர் மாணவர் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதும் மாணவர்கள் வௌியேறாத காரணத்தால் அக்கரைப்பற்று காவற்துறையில் பல்கலைக்கழக நிர்வாகம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும் , நேற்று மதியம் பொல்லுகளுடன் விடுதியில் நுழைந்த பல்கலைக்கழக பாதுகாவலர்கள் குழுவொன்று குறித்த மாணவர்களை தேடும் சிசிடிவி காணொளி சமூக வலைத்தளங்களில் வௌியாகியிருந்தது.
எவ்வாறாயினும் , வகுப்பத்தடை மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த சந்தர்ப்பத்தில் விடுதியினுள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Hirunews
0 comments:
Post a Comment