July 2, 2018
விவசாயிகளின் சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இம்முறை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன்னை கொள்வனவு செய்வது நெல் சந்தைப்படுத்தல் சபையின் இலக்காகும். நெல்லைக் கொள்வனவு செய்வதற்காகத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவையின் பரிந்துரை இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹொட்டி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதம் அளவில் சிறுபோக அறுவடையைச் சந்தைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment