Monday, July 2, 2018

முடிந்தால் செய்து காட்டுங்கள்: மகிந்தவுக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணி

July 02.2018

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க பெறப்பட்ட கடனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார செயலவுகளுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்துக்காட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர இளம் தொழில் நிபுணர்கள் அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு சவால் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஒரு சட்டத்தரணி என்பதுடன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. சத்தியக்கடிதத்தை வழங்குவது போல் முட்டாள் தனமாக செயற்படக் கூடாது.

சீன நிறுவனத்தின் துணை நிறுவனத்திடம் இருந்து தனக்கு காசோலை கிடைத்ததா இல்லையா என்ற விடயத்தில் தெளிவான பதிலை அவர் வழங்க வேண்டும்.

நாட்டு மக்கள் இவை குறித்து அவதானிப்புடன் இருக்க வேண்டும். நல்ல மனிதர்கள் கண்ணை மூடிக்கொண்டிருப்பதன் காரணமாகவே தீய குணங்களை கொண்டவர்கள் முன்னோக்கி வர வாய்ப்பு கிடைக்கின்றது.

பெரிய திருடர்கள் தேசப்பற்றுள்ள வீரர்களாக மாறிய சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். ஒரு டொலர் பணத்தையேனும் தான் பெற்றதாக ஒப்புவிக்கப்பட்டால், துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

அப்படியானால், தற்போது அவர் எத்தனை முறை தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும்?.

தான் திருடன் இல்லை என்று அவர் கூறுகிறார். எனினும் அவர் எமது நாட்டை உங்களது நாட்டை அடக்கு வைத்து அதில் இலஞ்சம் பெற்றுள்ளார்.

7.6 மில்லியன் டொலர்தான் அந்த இலஞ்சம். நாமல் ராஜபக்சவின் கிறிஸ் கொடுக்கல், வாங்கல், மற்றைய மகனின் சீ.எஸ்.என் தொலைக்காட்சி மோசடி என்பவற்றை நாடு மறந்து விட்டது எனவும் ரஜிக கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment