Monday, July 2, 2018

கைதானவர்களிடமிருந்து 35 மில்லியன் பெறுமதியான கொக்கைன் வில்லைகள் மீட்பு

July 2, 2018

கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் இருவரிடம் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து இதுவரையில் 153 வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு எடுக்கப்பட்ட 1 கிலோ 400 கிராமுடைய கொக்கைன் 35 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர்கள் இருவரும் நேற்று (01) மற்றும் நேற்று முன்தினம் (30) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Daily Ceylon

0 comments:

Post a Comment