Monday, July 2, 2018

மஹிந்தவுடனான இன்றைய சந்திப்பை தயாசிறி, எஸ்.பீ. புறக்கணிப்பு


July 2, 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவும், கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள கட்சித் தலைவர்களும் இன்று (02) மாலை மஹிந்த ராஜபக்ஷவுடன் நடாத்திய விசேட கலந்துரையாடலில் தயாசிறி ஜயசேகர, எஸ்.பீ. திஸநாயாக்க ஆகியோர் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

16 பேர் கொண்ட குழுவிலுள்ள இரண்டு பேர் தவிர ஏனைய சகலரும் இன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் தொடர்ந்தும், 16 பேர் கொண்ட குழு தொடர்பில் முன்வைத்து வந்த கருத்துக் குறித்து  நேற்று(01) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தயாசிறி ஜயசேகர கடுமையாக விமர்சித்திருந்தார்.

பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிப்பதற்கு தான் ஒருபோதும் தயாரில்லையெனவும் அவர் கூறியிருந்தார். கூட்டு எதிரணியில் செயற்படுவதற்கு பொதுஜன பெரமுனவில் இணைந்தால் தான் முடியும் என்றால், பாராளுமன்றத்தில் ஒதுங்கியிருந்து செயற்படுவதற்கு தன்னால் முடியும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment