Monday, July 2, 2018

தகவல் வழங்கிய ஊடகவியலாளர்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை

  02 JULY 2018

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரைக்காக, இலங்கையின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கிய இலங்கையர் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையுடன், இலங்கையின் ஊடகவியலாளர்களான நடேஷா பெஸ்டியன் மற்றும் ஆர்தர் வாமனன் ஆகிய இரண்டு பேரும் சம்மந்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்கள்.

அவர்கள் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளிக்க வேண்டும்.

அதேநேரம் குறித்த ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கிய இலங்கையர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment