July 2, 2018
ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 4 ஆம் திகதி கல்வித் துறைசார்ந்த சகல தொழிற்சங்கங்களின் ஊழியர்களும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ஒன்றுபட்டுள்ளதாக கல்வியைப் பாதுகாப்பதற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் கல்வித்துறையுடன் தொடர்புடைய சகல அரச அமைப்புக்களிலும் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் சுகயீன விடுமுறையில், கல்வி அமைச்சின் முன்னால் ஒன்று கூடவுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நீல் அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பழிவாங்கப்பட்டவர்கள் என்ற பேர்வையில், தமது அரசியலுக்காக உழைத்தவர்களுக்கு நன்றிக் கடன் தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக 1000 பேருக்கு பதவி உயர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இவ்வொன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையை உடன் கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே எதிர்வரும் 04 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment