Tuesday, July 17, 2018

16 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த, முன்னாள் எம்.பி.யான பிக்கு கைது

July 17, 2018 

மீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பௌத்த பிக்கு கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபெரெக்கே புஞ்ஞானந்த என்னும் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த துறவறம் பூணும் நோக்கில் விஹாரையில் தங்கியிருந்த சிறுவனை குறித்த பௌத்த பிக்கு கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோக சம்பவத்தின் பின்னர் சிறுவன் வீட்டுக்குச் சென்றுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் பெற்றோரிடம் கூறியதனைத் தொடர்ந்து பெற்றோர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jaffna Muslim 

0 comments:

Post a Comment