21.12.2018
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யவுள்ளனர்.
இதன்படி இன்றைய தினம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தத்திற்கு அமைய தேசிய அரசாங்கம் அல்லாத ஒரு அராங்சத்தில் 40 அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்களை நியமிக்க முடியும்.
இந்த சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள நிலையில், தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்ற வண்ணம் உள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
HiruNews






0 comments:
Post a Comment