21.12.2018
ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று காலை இந்த விசேட மத்திய செயற்குழு கூட்டம் கட்சித்தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, அடுத்த ஆண்டுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக உறுப்பினர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சின் செயல்பாடு குறித்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர், இன்று முதல் கல்வி அமைச்சின் பணிகள், முன்பு இடம்பெற்றதை போன்று முன்னெடுக்கப்படும் என்றும் தங்களால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், தங்களால் முன்னெடுக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டங்கள் கடந்த 50 நாட்கள் நிலவிய அரச நிர்வாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில், அறிக்கை ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment