Friday, December 21, 2018

இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது


December 21, 2018

இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் எதிராக 06 வாக்குகள் கிடைத்துள்ளன.

எவ்வாறாயினும் இந்தக் கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக கூறியிருந்தார்.

இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment