Sunday, December 23, 2018

முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை- அமைச்சர் மத்தும பண்டார

December 23, 2018

முறையான முறையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும், பொது மக்களின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாகவும் மக்களுக்கு ஒழுங்காக சேவையாற்றவே அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

0 comments:

Post a Comment