December 23, 2018
ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்களுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பியசேன கமககே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய எதிர்க் கட்சித் தலைமையை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை மீண்டும் ஒரு முறை அழிவை நோக்கி இட்டுச் சென்றுள்ளார் எனவும் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் ஸ்ரீ ல.சு.க.யின் எம்.பி.க்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில்லையெனவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு தாம் அஞ்ச மாட்டோம்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாயின் முதலில் எடுக்கப்பட வேண்டியது மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிராகவே யாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment