December 23, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் காணப்படும் அமைச்சுக்களுக்கு அடுத்தபடியாக பொறுப்புக்கள் அதிகம் உள்ள இரு அமைச்சுக்கள் பீ.ஹரிஸன் மற்றும் ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோருடையது என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடைய அமைச்சுக்களிடம் அதிகமான அரச நிறுவனங்களும், விடயப் பரப்புக்களும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களின் அதிகாரிகள் அமைச்சுக்களின் பொறுப்புக்கள், விடய பரப்புக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தகவல் வட்டாரங்களே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அண்மையில் இடம்பெற்ற அனுராதபுர மாவட்ட நிருவாகிகளுடனான அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் பீ. ஹரிஸனுக்கு அதிகப்படியான பொறுப்புள்ள அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
0 comments:
Post a Comment