08.11.2018
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் 4 ஆவது கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த செயலணிக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகள் பங்குகொண்டிருந்தனர்.
இதன்போது வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த மாத இறுதிக்குள் வடக்கில் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எமது செய்தி சேவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை தொடர்பு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் குறித்து மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
Hiru
0 comments:
Post a Comment