Tuesday, November 20, 2018

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த த.தே.கூட்டமைப்பினர்...!

20, 11. 2018

இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளின் இராஜதந்திரிகளுடன், ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரேப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் இராஜதந்திரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் முக்கியத்துவமிக்க பல விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பு குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஊடக சந்திப்பொன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment