Tuesday, November 20, 2018

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

20.11.2018

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம், விவசாயம் மற்றும் கலை கலாசாரம் முதலான பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ஜெயசிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பல்கலைக்கழக விடுதி வசதியுள்ள மாணவர்கள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதிகளுக்கு திரும்பலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment