Thursday, November 1, 2018

திகன கலவரத்தின் போது, பொலிஸாரே கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தனர் – அமித் வீரசிங்க…!

NOVEMBER 1, 2018

திகன கலவரத்தின் போது பொலிஸாரே கலவரத்தை தூண்டிவிட்டதாக, சிறையில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க கூறியுள்ளார்.

தன்னோடு நாமல் குமார என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு பொலிஸ்மா அதிபர் வழங்குவதாக கூறிய 5 லட்சம் ரூபாவை டி ஐ ஜி நாலக சில்வா பெற்றுக்கொண்டு, அதனை வழங்காததால்  நாலக சில்வா நாமல் – குமார இடையே மோதல் வெடித்து அனைத்து சூழ்சிகளையும் அவர் வெளியிட்டதாகவும் அமித் வீரசிங்க வெளியிட்டுள்ளார்.

திகன கலவரம் நடைபெற்ற போது பொலிஸார் வேடிக்கை பார்த்தாகவும் பாதுகாப்பு பிரிவினர் கலவரத்தை தூண்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது..

Kalmunaitoday

0 comments:

Post a Comment