NOVEMBER 1, 2018
பிற்போடப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வை முன்னரே திட்டமிட்டப்படி எதிர்வரும் 05 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
16ம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என்று நேற்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்த போது கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி சபை அமர்வு எதிர்வரும் 5ம் திகதி கூட்டப்படவுள்ளது.
0 comments:
Post a Comment