Tuesday, November 20, 2018

மீலாது நபி விழா கொண்டாட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 60 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு. பலர் காயம்.


   November 20, 2018

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் இன்று நடைபெற்ற மீலாது நபி விழா கொண்டாட்டத்தில்
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.

இந்த  ஆண்டின் மீலாது நபி கொண்டாட்டங்கள் இலங்கை, இந்தியா , பாகிஸ்தான் உற்பட  வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று மீலாது நபி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இன்று மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர்  படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலைப்படை தாக்குதலாக  கருதப்படும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்று கொள்ளாத நிலையில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

0 comments:

Post a Comment