23.11.2018
நாடாளுமன்ற தெரிவுக்குழுஉறுப்பினர்கள் தொடர்பான பிரேரணை 21 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்றகட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பில்இறுதி முடிவு எட்டப்படவில்லை.
எனினும் சபாநாயகர்கரூ ஜயசூரியவினால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்றுகாலை சபை அமர்வு ஆரம்பமான போது வாசிக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 உறுப்பினர்களும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தலா 1 உறுப்பினரின் எனமொத்தமாக 12 உறுப்பினர்களிக் பெயர்கள் வாசிக்கப்பட்து.
இதனை ஜனாதிபதி மைத்தரிபாலசிறிசேன பிரதமர் மஹிந்த ரஜபக்சவின் புதிய அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறும் தெரிவுக்குழுவின் பெரும்பான்மையினை தமக்கே வழங்குமாறும் மஹிந்த தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்தினேஸ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.
அதனை ஐக்கிய தேசியக்கட்சி தரப்பு நிராகரித்த நிலையில் பெயர் மூலம் வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என மக்கள்விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.
எனினும் மஹிந்த தரப்பினர்அதனை பகிஷ்கரிப்பு செய்வதாக கூறி சபையினை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
எனினும் நாடாளுமன்றநடவடிக்கைகளை தொடர்ந்த சபாநாயகர் நாடாளுமன்றில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை தெரிவு செய்தல் தொடர்பாக இலத்திரனியல்முறைமையில் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பினை நடாத்தினார்.
அதனடிப்படையில்121 வாக்குகளுடன் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரூ ஜயசூரிய அறிவித்தார்.
அத்துடன் 27 ஆம் திகதிமதியம் ஒரு மணிக்கும் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கும் சபையை ஒத்திவைப்பதாகசபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment