23.11.2018
மஹிந்த ராஜபக்சவுக்கான பெரும்பான்மையை 2020க்குள் அவசியப்படும் போது பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தற்சயம் நாடாளுமன்றைக் கலைப்பதற்கான தனது தீர்மானத்தை மைத்ரிபால சிறிசேன வாபஸ் பெற வேண்டும் எனவும் அவருக்கு அவசர அறிவுரை வழங்கியுள்ளது ஸ்ரீலசுக ரணில் எதிர்ப்புக்குழுவான குரூப் 16.
இதனடிப்படையில் ஜனாதிபதி தனது கசற் (சுற்றுநிருபத்தை) இரத்துச் செய்து உத்தரவிட வேண்டும் எனவும் பெரும்பான்மையை நிரூபித்து மஹிந்த அணி புதிய அரசொன்றை நிறவ முடியும் எனவும் குறித்த குழுவினர் ஜனாதிபதிக்கு நம்பிக்கை வழங்கியுள்ளனர்.
எனினும், இன்றைய தினம் 121 பேரின் வாக்களிப்புடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் நிறைவு பெற்றுள்ளமையும் தமது தரப்பில் தொடர்ந்தும் 122 பேர் நிலைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment