23.11.2018
கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானத்தால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் நலின் பெரேரா, எல்.டீ.பீ.தெஹிதெனிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அந்த மனு பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அடுத்த மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஏனைய மனுக்களுடன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவும் பரிசீலிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை அண்மையில் பரிசீலித்த உயர் நீதிமன்றம் குறித்த வர்த்தமனி அறிவிப்பிற்கு டிசம்பர் 7 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கமைய அந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 4, 5 மற்றும் 6 திகதிகளில் இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment