Thursday, October 4, 2018

யாழ் குடிநீர் தேவை தொடர்பில் வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்


04.10.2018

யாழ்ப்பாணத்தின் குடிநீர்த்தேவை தொடர்பில் இன்று வட மாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 133வது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தாலைமையில் இடம்பெற்றது

இந்த நிலையில், வருடாந்தம், கடலுக்கு செல்லும் பாலியாறு நீரினை முழங்காவில் பகுதியில் சேமித்து அதை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும் திட்டத்தினை அவதை தலைவர் பிரேரணையாக சபையில் முன்மொழிந்தார்

குறித்த பிரேரணையை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்துள்ளார்.

இதையடுத்து, பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் குறித்த பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது

0 comments:

Post a Comment