October 27 2018
இன்றிலிருந்து 27.10.2018 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மதியம் 12 மணி வரை சமயப் பாடசாலைகள் தவிர்ந்த வேறு எதுவித பிரத்தியேக மற்றும் பாடசாலை வகுப்புக்கள் பாடசாலைகளிலும், டியூசன் நிலையங்களிலும் நடைபெறக்கூடாது என கிழக்குமாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போத இந்த அறிவித்தலை ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தலினை மீறி ஞாயிறு காலை வகுப்பு நடாத்துபர்களிற்கு எதிராக பல ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றும் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பிரத்தியேக பாடம் ஒன்றினை நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு ஐந்து வருடங்களுக்கு தூரப் பிரதேசத்திற்கு இடமாற்றம் வழங்குமாறு மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு கண்டிப்பான உத்தரவிட்டதுடன் இவ்விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொலீஸ் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்க தலைவர்கள் மற்றும் பொலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட கிழக்கு மாகாணத்தின் இன்னும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment