27.10.2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்வை பெற்றுக் கொடுப்பதாக தம்மிடம் உறுதியளித்தாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 1000 ரூபா வேதன உயர்வை வலியுறுத்தி ஹப்புத்தளை - தம்பேதன்ன - பிட்ரத்மலை தோட்ட மக்கள் இன்று ஹப்புத்தளை நகரில், போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஊர்வலமாக ஹப்புத்தலை நகருக்கு சென்று அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment