Friday, October 26, 2018

வன்முறையில் ஈடுபட வேண்டாம்: அமெரிக்கா அறிவுரை!


27.10.2018

இலங்கையில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் அரசியல் சட்டத்துக்கமைவாக தீர்வைக் காண வேண்டும் என அமெரிக்கா. தெரிவிக்கிறது

மஹிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இரு பிரதமர்கள் உள்ள சூழ்நிலை நிலவுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்கு அநீதி நடந்து விட்டதாகவும் நாடாளுமன்ற பெரும்பான்மை இருப்பதாகவும் தெரிவிக்கின்ற நிலையில் மஹிந்த தரப்பு ஆதரவு தேடி சந்திப்புகளை நடாத்தி வருகிறது. இந்நிலையிலேயே வன்முறைகளைத் தவிர்க்குமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment