Saturday, October 27, 2018

அலரி மாளிகைக்குள் புகுந்து ரணிலை வெளியேற்றுவோம்! - மகிந்த தரப்பு எச்சரிக்கை

2018-10-27

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து வெளியேற மறுத்தால் அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு எந்த வித அதிகாரமும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க  வெளியேற மறுத்தால் மக்கள் ஆதரவை திரட்டி அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெலவும் ரணில் விக்கிரமசிங்க கௌரவமாக வெளியேறாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

      

0 comments:

Post a Comment