27.10.2018
புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முன்பிருந்த அமைச்சரவை தற்போது கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம், அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச வங்கிகளின் பிரதானிகளின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment