19.08.2018
அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு என்னும் பிரதேசத்தில் பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் தெரிவுக்குழு அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பின் அமைப்பாளர்
எம்.ஏ.சஷிநியாஸ் மற்றும் பொது ஜன பெரமுன கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும்மான எஸ்.எம்.இர்ஷாத் அவர்களின் தலைமையின் கீழ் அமைப்பாளர் தெரிவு நேற்று18 இடம் பெற்றது.
இந்நிகழ்வின்போது ஏராளமான இளைஞர்கள் வருகைதந்து இக்கட்சியில் இணைந்து கொண்டனர் இதன் பின்னர் மாளிகைகாடு பிரதேசத்திற்கு அமைப்பாளராக
முகம்மட் பர்ஹான் அவர்கள் இளைஞர்கள்,பொதுமக்கள் முன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு பொது ஜன பெரமுன முஸ்லிம் அமைப்புக்கான அமைப்பாளர் அங்கத்துவமும் வழங்கிவைக்கப்பட்டது.






0 comments:
Post a Comment