August 19, 2018
தனியார் துறையினரின் குறைந்தபட்ச வேதனத் தொகையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்ர சமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், தனியார் துறையினரின் குறைந்தபட்ச வேதனம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் 9 தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment