Saturday, August 18, 2018

இள வயது மரணத்துக்கு காரணமாகும் மாரடைப்பும்

18.08.2018

கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­தி­களில் அனே­க­மா­னவை இளம் வயது மர­ணங்­க­ளாக அமைந்­தது. பெரும்­பா­லான மர­ணங்­க­ளுக்கு மார­டைப்பு கார­ண­மாக அமைந்து. இம் மர­ணங்கள் நேற்­றைய எனது இரவை கண­மாக்­கி­ய­தோடு நாளைய நாள் நானா­கவும் இருக்­கலாம் என்ற எண்­ண­மா­கவும் இருந்­தது. இரும்புக் கோட்­டையில் இருந்­தாலும் ஒவ்­வொ­ரு­வ­ரையும் மரணம் குறித்த கணத்தில் இறைவன் நாட்­டப்­படி வந்தே தீரும்.

இங்­குள்ள வாழ்க்கை முறை, மித­மிஞ்­சிய மன அழுத்­தங்கள் போன்­றவை பல தொற்ற நோய்­க­ளான(Non Communicable Disease) Ischemic Heart Disease(Heart Attack),Diabetes Mellitus, Hypertension, Hyper cholesterol போன்­ற­வைக்கு கார­ண­மாக அமை­வ­துடன் மிக குறைந்த விலையில் கிடைக்கும் Cigarettes/புகைத்­தலும்(Smoking) கார­ண­மாக அமை­கி­றது.

இன்­றைய காலை வேளை ஆரம்ப முதல் எனது வகுப்பு தோழன் தற்­போது கத்­தாரில் வேலை செய்யும் சகோ­தரர் முப்லி ஜப்­பாரின் மரண செய்தி அதிர்ச்­சி­யாக அமைந்­தது.

இந்த இடத்தில் சமீப கால­மாக இளை­ஞர்­க­ளையும் பலி கொள்ளும் மார­டைப்பு (HEART ATTACK) ஏன் ? எப்­படி? வரு­கி­றது என்­பது பற்றி இந்த இடத்தில் நோக்­கு­வது பொருத்தம் எனக் கரு­து­கிறேன்.

Heart Attack(மார­டைப்பு) என்ற பெயரை உச்­ச­ரித்­தாலே வய­தெல்­லை­யின்றி அச்­சத்­துடன் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். ஒரு கால­மி­ருந்­தது 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கே மார­டைப்பு அதிகம் ஏற்­பட்­டது. பின்னர் 50,40 என்­றாகி தற்­போது 30 வய­திலும் மார­டைப்பு ஏற்­ப­டு­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக 26,28 வயதில் மார­டைப்பு ஏற்­பட்­ட­வர்­க­ளையும் நான் சந்­தித்­துள்ளேன் .உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் இறப்­பிற்­கு­ரிய முதன்­மை­யான கார­ணி­யாக அமை­வது மார­டைப்­பாகும்.

மார­டைப்பு என்றால் என்ன?
இதயம் சுருங்கி விரி­வதன் மூலம் உடம்­பி­லுள்ள பல்­வே­று­பட்ட பகு­தி­க­ளுக்கு ஒட்­சிசன் ஏற்­றப்­பட்ட குருதி நாடிகள் மூலம் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது. இத­யத்­தி­லி­ருந்து வெளி­யா­கின்ற ஏறு பெரு­நா­டியில் (Ascending Aorta) இருந்து உரு­வா­கின்ற முடி­யுரு நாடிகள் (Coronary Arteries)வலது,இடது என பல கிளை­க­ளாக பிரிந்து இதயம் சுருங்கி விரிய தேவை­யான ஒட்­சிசன் ஏற்­றப்­பட்ட குரு­தியை வழங்­கு­கி­றது.

மேற்­படி முடி­யுரு நாடி­களில் ஏற்­ப­டு­கின்ற அடைப்­புகள்/தடைகள் கார­ண­மாக இத­யத்­திற்குச் செல்­லு­கின்ற ஒட்­சிசன் ஏற்­றப்­பட்ட குரு­தியின் அளவு குறை­வ­டை­வ­தனால் இத­யத்தின் தசை­களில் பாதிப்பு ஏற்­ப­டு­கி­றது.

முடி­யுரு நாடி­களை ஒரு குழாய் என்ற ரீதியில் கற்­பனை செய்தால் இதன் உள்­ப­குதி (Lumen) எவ்­வித தடை­யில்­லாமல் காணப்­படும். பல்­வேறு செயற்­பாட்­டினால் மேற்­படி முடி­யுரு நாடி­களின் உட்­புற சுவர்­களில் Atherosclerosis என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு இத­னு­டைய அமைப்பு பல்­வே­று­பட்ட கார­ணங்­க­ளினால் பெரி­தாகி மாற்றம் ஏற்­படும் போது (Plaques with Blood clots) உட்­புற சுவரின் விட்டம் குறைந்து செல்லும்.

இதனால் முடி­யுரு நாடி­களின் உட்­புற சுவரின் விட்டம் குறை­வ­டைந்து செல்­வ­தனால் இத­யத்­திற்­கு­றிய இரத்த ஓட்டம் குறையும். ஒரு நிலையில் மேற்­படி Atherosclerosis உட்­புற சுவரை பூர­ண­மாக தடை செய்­வ­தனால் இத­யத்­திற்­கு­றிய இரத்த ஓட்டம் முழு­வ­து­மாக தடைப்­ப­டு­வதால் மரணம் ஏற்­ப­டு­கி­றது.

மார­டைப்­புக்­கான கார­ணிகள்
1)வயது (வயது கூடி செல்­லும்­போது மார­டைப்பு ஏற்­ப­டு­வ­தற்­கு­றிய நிகழ்­த­கவு அதிகம்)
2)பால் (ஆண்>பெண்)
3)மார­டைப்பு சம்­பந்­த­மான குடும்ப வர­லாறு (குடும்­பத்தில் அதிலும் மிக நெருங்­கி­ய­வர்­க­ளுக்கு 55வய­திற்கு முன் மார­டைப்பு ஏற்­பட்டால் நிகழ்­த­கவு அதிகம்)
4)புகைத்தல் (Smoking)
5 உயர் குரு­தி­ய­ழுத்தம் )High Pressure(Hypertension)
6 ) High Cholesterol (Lipid Profile இல் LDL கூடி/HDL குறை­வ­டை­கின்ற போது மார­டைப்­பிற்­கான நிகழ்­த­கவு அதிகம்)
7) நீரி­ழிவு நோய்(Diabetes Mellitus)
8) உடல் பருமன் (Obesity)-Body Mass Index(BMI) உங்கள் நிறையை உங்கள் உய­ரத்­தினால் (Meter) வகுத்து வரும் பெறு­மா­னத்தை மீண்டும் உய­ரத்­தினால் வகுத்து வரும் பெறு­மானம் 25ஐ விட அதி­க­ரிக்கும் போது மார­டைப்பு ஏற்­பட வாய்ப்பு அதிகம்
9) Sedentary Life Style (அசை­யாமல் ஒரு இடத்­திலே தொடர்ச்­சி­யாக இருந்து கொண்டு Phone,TV,Computer பாவிப்­பது……போன்­றவை)
10)முறை­யான உடற்­ப­யிற்சி இன்மை

11)முறை­யற்ற உணவு பழக்கம

இவற்­றை­விட தற்­கால உலகில் *மன­அ­ழுத்­தத்­துடன் கூடிய வாழ்க்­கையும்(Stressful Life) பிர­தா­ன­மாக அமை­கி­றது.
மார­டைப்பின் அறி­கு­றிகள் (Symptoms of Heart Attack)
மார­டைப்பின் அறி­கு­றிகள் வயது,மார­டைப்பு ஏற்­பட்ட இத­யத்தின் பகுதி,நீரி­ழிவு போன்ற வேறு நோயுள்­ள­வர்கள் போன்­ற­வற்­றிற்கு அமைய வேறு­படும்.

1) நெஞ்­சு­வலி(Chest Pain)- ஏறத்­தாழ அனே­க­மா­ன­வர்­க­ளுக்கு இலே­சான நெஞ்சு வலி­யுடன் ஆரம்­பிக்கும்.பொது­வாக இடது நெஞ்சு பகுதி/நடு நெஞ்சில் இறுக்கி பிடிப்­பது போன்ற நோவு மெது­வாக விட்டு விட்டு ஆரம்­பித்து நேரம் செல்லச் செல்ல வலி கூடு­வ­துடன் இந்த நோவு கழுத்து,இடது தோள்­பட்டை,இடது தாடை,இடது கைக­ளுக்கும் பரவும். இது 20 நிமி­டத்தை விட அதி­க­மாக இருக்கும்.எந்­த­வித நோவு இல்­லா­மலும் மார­டைப்பு ஏற்­ப­டலாம்(Silence Heart Attack).இதையே இரவில் தூங்­கி­யவர் காலையில் மரணம் அரு­கி­லுள்­ள­வ­ருக்கு கூட அறி­ய­வில்லை என்று சொல்­லப்­ப­டு­கின்ற சம்­ப­வங்­க­ளாகும்.

இதை தவிர இத­யத்தின் கீழ்ப்­ப­கு­தியில் ஏற்­ப­டு­கின்ற மார­டைப்பு(Inferior Heart Attack) வயிற்­றுப்புண்(Gastric Ulcer)அறி­கு­றி­யான நெஞ்சி எரிவு(Burning Sensation) குமட்டல் போன்ற ஒத்த அறி­கு­றி­க­ளாக அமையும்.

இன்று காலை மர­ண­மா­கிய சகோ­த­ர­ருக்கு நெஞ்சு வலி ஏற்­ப­ட­வில்லை.நெஞ்சு எரிவு ஏற்­பட வழமை போன்று Gastritis/Ulcer என பலர் நினைப்­பது போன்று அவரும் நினைத்­துள்ளார்.இடது கை இலே­சான வலியை தவிர வேறு எந்த அறி­கு­றியும் இல்லை. இதே மன­நி­லையில் தான் நாம் பலர் உள்ளோம்.இவ்­வா­றான அறி­கு­றிகள் ஏற்­படும் போது சூடான நீர் (Hot Water) வெள்ளை பூண்டு(Garlic) சாப்­பி­டு­வ­திலும் வைத்­தி­ய­சா­லைக்கு அவ­ச­ர­மாக செல்­ல­வேண்­டிய Golden Time வீடு­களில் கழிப்­பதால் பல மர­ணங்கள் நிகழ்­கின்­றன.
வய­தா­ன­வர்கள், நீண்ட கால நீரி­ழிவு நோயா­ளிகள் எவ்­வித நெஞ்சு நோவு இல்­லாமல் சில வேளை தலை சுற்று/மயக்கம் மட்டும் மார­டைப்­பிற்­கு­ரிய அறி­கு­றி­க­ளாக அமையும்.

இதை தவிர இந்­நோ­வுடன்
-வாந்தி(Vomiting)
-குமட்டல்(Nausea)
-அதிக வியர்வை(Excessive Sweating),
-நெஞ்சி பட பட­வென்று அடித்தல்(Palpitation)
– மூச்சு தினறல்
-தலை சுற்று/மயக்கம்

மார­டைப்பை எவ்­வாறு கண்­டு­பி­டிக்­கலாம்?
1)Clinal History
2)ECG-Electro Cardio Graph
மேற்­படி அறி­குறி ஏற்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அணு­ம­திக்­கப்­ப­டு­கின்ற போது ECG மாற்­றங்கள் மூலம் மார­டைப்பு ஏற்­ப­டு­வதை உறுதி செய்­யலாம்.இதன்­போது ECG எவ்­வித மாற்­ற­மின்றி தொடர்ச்­சி­யாக அறி­கு­றிகள் இருக்கும் போது மீண்டும் மீண்டும் ECG எடுக்­கப்­படும். சில­ருக்கு ஓய்வு நேரங்­களில் எவ்­வித நோவும் இல்­லா­மலும் இயக்­கத்தின் போது மட்டும் நெஞ்சு நோவு ஏற்­ப­டு­வதால் ஓய்வு நிலையில் ECG எடுப்­பதால் இதில் எவ்­வித மாற்­றத்­தையும் காண முடி­யாது.இதன்­போது Exercise ECG பரிந்­துரை செய்­யப்­படும்.

3)Cardiac Enzymes
4)Cardiac Catheterisation/Angiography(மேற்­படி இத­யத்­திற்கு குரு­தியை வழங்­கு­கின்ற முடி­யுரு நாடி­களில் எங்­கெல்லாம் அடைப்பு உள்­ளது(block),எத்­தனை வீதத்தில் அடைப்பு உள்­ளது போன்­றவை அறிய முடியும்.இத­ன­டிப்­ப­டை­யிலே மருந்து பாவிப்­பதா? Or Bypass Operation என்­பன தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.

மார­டைப்பை முகாமை செய்தல்
மேற்­படி அறி­கு­றிகள் ஏற்­ப­டு­மி­டத்து அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு உட­ன­டி­யாக அனு­ம­திக்க வேண்டும்.இதை தவிர வீடு­களில் வைத்து வீட்டு வைத்­தியம் செய்தல்,தனியார் மருந்து நிலை­யங்­க­ளுக்கு(Private Medical Centre)செல்லல் போன்­ற­வற்­றினால் வைத்­தி­ய­சா­லைக்கு செல்ல இருக்­கின்ற நேரம் தாம­திப்­பதால் இதய தசை கலங்கள் மீள் முடி­யாத சாவுக்கு உள்­ளா­கின்­றனர். மார­டைப்பு ஏற்­பட்டு குறிப்­பிட்ட நேரத்­திற்குள் உரிய சிகிச்சை எவ்­வ­ளவு முன்­கூட்டி வழங்­கப்­ப­டு­கின்­ற­தற்கு அமைய சிக்­கல்கள் தடுக்­கப்­ப­டு­கி­றது.
வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட ஆரம்ப சிகிச்­சைக்கு பின் பின்­வரும் ஆலோ­ச­னை­களை வழங்­கப்­படும்.இவற்றை உரிய முறையில் தவ­றாமல் பின்­பற்ற வேண்டும்.

-தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனை
-தொடர்ச்சியான பரிசோதனைகள் ( Regular Check up-Monthly Fasting Blood Sugar,Weight&Blood Pressure six monthly Fasting Lipid Profile)
-தொடர்ச்சியான மருந்து பாவனை
-மேலதிக பரிசோதனைகள்/சிகிச்சைகள்
– வாழ்க்கை ஒழுங்கை சீரமைத்தல்
– ஆரோக்கிய உணவுப் பழப்பம்
– புகைத்தலை நிறுத்துதல்

– தொடரான உடற்பயிற்சி (வேகமான நடை,ஓட்டம்,நீந்துதல்,சைக்கிள் ஓடுதல் போன்றவை.இவை உள்ளத்தில் பதித்து உணர்வுகளுடன் செய்யுமII      , S் போதே மூளையில் இதற்குறிய நரம்பு இரசாயன பதார்த்தங்கள் சுரக்கப்பட்டு உடலில் மாற்றம் ஏற்படும்.

– மன அழுத்தமற்ற ஓய்வான வாழ்க்கை

.. Jஇவற்­றை­விட தற்­கால உலகில் *மன­அ­ழுத்­தத்­துடன் கூடிய வாழ்க்­கையும்(Stressful Life) பிர­தா­ன­மாக அமை­கி­றது.

– தொடரான உடற்பயிற்சி (வேகமான நடை,ஓட்டம்,நீந்துதல்,சைக்கிள் ஓடுதல் போன்றவை.இவை உள்ளத்தில் பதித்து உணர்வுகளுடன் செய்யும் போதே மூளையில் இதற்குறிய நரம்பு இரசாயன பதார்த்தங்கள் சுரக்கப்பட்டு உடலில் மாற்றம் ஏற்படும்.

– மன அழுத்தமற்ற ஓய்வான வாழ்க்க.

நன்றி
Dr ஏ.எச். சுபியான்
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician
கட்டார்

0 comments:

Post a Comment