August 17, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சத்திர சிகிச்சை எதிர்வரும் திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பிரபாத் வேரவத்த தெரிவித்துள்ளார்.
சிறுநீரகத்திலுள்ள கல் ஒன்றை அகற்றுவதற்காக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்பொழுது தேரர், நினைவு மறக்கடிக்கச் செய்ய முடியுமான உடல் நிலையில் காணப்படுவதாகவும் டாக்டர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து தேரர் சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேரரின் இருதயத்திலும் பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை பிற்போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Muslim






0 comments:
Post a Comment