17.2018
கொழும்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கூட்டத்தைக் காண முடியும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்துதல், தேர்தலை பிற்போடுகின்றமை உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தாம் முன்னெடுக்க உள்ள 'கொழும்புக்கு மக்கள் சக்தி' என்ற எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று விளக்கமளித்துள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
அதிக வரிச்சுமை, அரச சொத்துக்களை விற்பனை செய்கின்றமை, வாழ்க்கைச் செலவு அதிகரித்தல், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்கள் தலைத்தூக்குதல் என்பனவற்றை அறிதவர்கள்போல அரசாஙகத்தினர் தமது ஆட்சியை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணியினர் ரத்கம நகரில் இன்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Hirunews






0 comments:
Post a Comment