02.08.2018
அமெரிக்காவிலுள்ள நபர் ஒருவர் வளர்த்து வந்த நாய் செல்லமாக அவரை நக்கியதால், நோய் தொற்று ஏற்பட்டு அவர் தனது இரண்டு கால்களையும் இழக்க நேரிட்டுள்ளது.
பெரும்பாலானோர் வீட்டில் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.
அது மனிதர்களை செல்லமாக நக்குகிறது. இதனை பெரும்பாலானோர் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.
அமெரிக்காவின் விஸ்கொன்சின் பகுதியை சேர்ந்த க்ரெக் மண்டவுபெல் என்ற நபர், தனது வீட்டில் நாயை செல்லமாக வளர்த்துள்ளார்.
அது அவரை அன்பாக நக்கும் போது, அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நாளாக நாளாக அவருக்கு காய்ச்சல், வாந்தி என்பன ஏற்பட்டுள்ளன.
இதனையும் கண்டுகொள்ளாத அவருக்கு உடல் முழுவதும் புண் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
நாய் நக்கியதால் அவர் உடல் முழுவதும் ''பதோகென்'' எனும் பக்டீரியா கலந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த நபரின், இரண்டு கால்களும் அவரது மூக்கும் அழுகியதால் அதனை மருத்துவர்கள் நீக்கியுள்ளார்.
வீட்டில் செல்லமாக வளர்க்கும் பிராணிகளிடத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.






0 comments:
Post a Comment