Wednesday, August 1, 2018

இப்படி ஒரு சம்பவத்தால் நுவரெலியாவில் மேடையில் நின்று போன திருமணம்!

  August 01, 2018 

திருமண நிகழ்வின் போது மணமகளின் அதிருப்தியால் மணமகனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் பலத்த எதிர்பார்ப்புடன் மணமேடைக்கு சென்றுள்ளார்.

தோட்ட வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தும் 27 வயதான இளைஞர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கனவுகளுடன் மனைவியை கை பிடிப்பதற்காக குறித்த இளைஞர் தனது உறவினர்களுடன், தனது திருமணத்திற்காக சென்றுள்ளார்.

அதற்கமைய திருமண வைபவம் ஆரம்பித்துள்ளது. மணமகனுக்கு மோதிரம் அணியும் சந்தர்ப்பம் வந்துள்ளது. இதன்போது மணமகன் தனது மோதிர விரலுக்கு பதிலாக நடுவிரலை நீட்டியுள்ளார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் தனது மோதிர விரலை குறித்த இளைஞன் இழந்துள்ளார்.

இதனால் அவமதிப்பு ஏற்பட்டதாக எண்ணிய மணப்பெண் உடனடியாக மணமேடையை விட்டு தனது அறைக்கு ஓடியுள்ளார்.

எனினும் இரண்டு தரப்பு உறவினர்களும் திருமணத்தை நடத்த எவ்வளவு முயற்சித்த போதிலும் மணமகள் சம்மதிக்கவே இல்லை. இதனால் இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்திவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

0 comments:

Post a Comment