August 20, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பொலிஸ் ஆணைக்குழு ஒன்றுகூடிய சந்தர்ப்பத்தின் போது இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு பின்னர் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பதவி உயர்வு நடைமுறைப்படுத்தாத சம்பவம் உட்பட 6 விடயங்கள் தொடர்பில் இந்த கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவரிடம் அத தெரண செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது, பொலிஸ் மா அதிபரிடம் கருத்துகளை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.
அததெரண






0 comments:
Post a Comment