Thursday, August 16, 2018

சமையல் எரிவாயுவுக்கான விலைச்சூத்திரம் அறிமுகம்

August 17, 2018

காஸ் விலை தொடர்பில் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையே, இந்த சூத்திரத்தை தற்போது தயாரித்து வருகின்றதென, வாழ்க்கைச்செலவுக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த விலைசூத்திரத்தை அமுல்படுத்தினால், உலகச்சந்தையில் காஸின் விலை குறைவடையும் போது, உள்நாட்டிலும் காஸின் விலை குறைவடையும் என்றும் அந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

காஸின் விலையை அதிகரிக்குமாறு, காஸ் நிறுவனங்கள் விடுத்திருந்த கோரிக்கை ஆராய்ந்ததன் பின்னரே, காஸ்ஸூக்கும் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளது.

இ​தேவேளை, எரிபொருட்களுக்கான விலை சூத்திரத்தை, நிதியமைச்சு அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதனடி​ப்படையில் ஒவ்வொரு மாதமும், 10ஆம் திகதியன்று, எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக சந்தையில் எரிவாயுவுக்கான கேள்வி மற்றும் விலையின் ஏற்றம் மற்றும் இறக்கத்துக்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment