Thursday, August 16, 2018

67ஆவது சுதந்திரக்கட்சி மாநாடு செப்டம்பர் 2இல் நடைபெறாது

August 17, 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது மாநாட்டை, செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியன்று நடத்தாமல் விடுவதற்கு, அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மாவட்ட மற்றும் தொகுதி சபைகள், இளைஞர் குழு மற்றும் பெண்கள் குழு ஆகியன இன்னும் நிறுவப்படவில்லை என்பதால் அவற்றை நிறுவியதன் பின்னர், சுதந்திரக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்குக் கட்சி தீர்மானித்துள்ளது,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் தலைமையில், மாநாட்டுக்கான குழு நிறுவப்பட்டுள்ளது.

அதன்போதே, மாநாட்டு நடத்தப்படும் திகதி, இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதிருக்கும் தற்காலிக அதிகாரிகள் சபையை கலைத்துவிட்டு, புதிய அதிகாரிகள் சபையை நியமிப்பது, கட்சியின் மாநாட்டுக்குப் பின்னர் இடம்பெறுமென கட்சித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment