Wednesday, August 1, 2018

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள்

, 01 AUGUST 2018

சிறைச்சாலை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட மேலும் சிலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், உதவி அத்தியட்சகர்கள் மற்றும் சிறைச்சாலை காவலர்கள் ஆகியோருக்கே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கே இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரபல போதை பொருள் வர்த்தகர்கள் சிறைச்சாலை காவலர்களின் உதவியுடன் போதை வர்த்தக்கத்தில் ஈடுபடுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment